என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா கஷ்டபடுவாங்க : ஷாலின் சோயா
ADDED : 11 hours ago
நடிகை ஷாலின் சோயா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து அறிமுகமானார். தமிழில் 'ராஜா மந்திரி' படத்தில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி 5 என்கிற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர். சமீபத்தில் ஷாலின் சோயா அளித்த பேட்டியில் காதல், திருமணம் வாழ்க்கையை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, எனக்கு எல்லாம் கல்யாணம் ஆகாது. என்னை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க? நான் காதலுக்கும் ஏற்ற ஆளோ, அல்ல கல்யாண வாழ்க்கைக்கு ஏற்ற ஆளோ கிடையாது. என்னை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க ரொம்ப கஷ்டம் தான் படுவாங்க. என் யோசனை முழுக்க இப்ப சினிமாவை பற்றித்தான் உள்ளது. கல்யாணத்தை பற்றி யோசிக்கவே இல்லை, அதுபற்றி எந்த ஐடியாவும் இல்லை'' என்கிறார்.