உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' படத்தை மாற்றுவாரா 'ஸ்பைடர் மேன்'

'ஜனநாயகன்' படத்தை மாற்றுவாரா 'ஸ்பைடர் மேன்'

ஹாலிவுட் பட சூப்பர் ஹீரோக்களில் 'ஸ்பைடர் மேன்' ஒரு முக்கியமான கதாபாத்திரம். அப்படத்தின் சில பல பாகங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில், இந்த வாரம் நாளை ஜூலை 30 'ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே' படம் வெளியாக உள்ளது. இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாகிறது.

'அவஞ்சர்ஸ்' படங்களின் மூலம் இந்தியாவிலும் பிரபலமான மார்வெல் ஸ்டுடியோஸ், 'ஸ்பைடர் மேன்' கதாபாத்திரம் மற்றும் படங்களைத் தயாரிக்கும் உரிமையைப் பெற்ற பிறகு, மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் வரிசையில் “ஸ்பைடர் மேன் - ஹோம் கமிங், ஸ்பைடர் மேன் - பார் பிரம் ஹோம், ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்,” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது 'ஸ்பைடர் மேன் - பிராண்ட் நியூ டே' படம் நாளை வருகிறது.

கடந்த மூன்று 'ஸ்பைடர் மேன்' படங்களை இயக்கியவர் ஜான் வாட்ஸ். நாளை வெளியாக உள்ள படத்தை இயக்கியிருப்பவர் டெஸ்டின் டேனியல் கிரெட்டான்.

இந்த நான்கு படங்களிலும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ளார்.

சுமார் 225 மில்லியன் யுஎஸ் டாலர் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால், வசூலிலும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !