உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி

மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி

வெங்கட் பிரபு, அஜித் குமார் கூட்டணியில் கடந்த 2010ம் ஆண்டில் 'மங்காத்தா' படம் வெளியானது. மங்காத்தா படத்தில் அஜித்தின் தோற்றம், வில்லத்தனம் கலந்த அவரது மாறுபட்ட கதாபாத்திரம் இதெல்லாம் ரசிகர்களைக் கவர்ந்து அந்த படம் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் வெளியாகி 16 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை அஜித், வெங்கட் பிரபு கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் மங்காத்தா படம் ரீ ரிலீஸாகி வரவேற்பை பெற்றது. வெங்கட்பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படம் சில பிரச்னைகளால் தாமதம் ஆகி உள்ளது. அதனால் அஜித்தை சந்தித்து ஒரு கதையை வெங்கட்பிரபு கூறியுள்ளாராம். அஜித்தும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது மங்காத்தா 2 வா? அல்லது புதிய கதையில் ஒரு படமா? என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !