உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது

7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது

கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏற்கனவே இதன் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நகராமல் அப்படியே நின்றது. சமீபத்தில் இதன் படபிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் பிரதானமாக ஒரு சண்டை மற்றும் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர். இந்த படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை விரைவில் முடித்து இவ்வருட ஜூலை மாதத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கேற்ப பணிகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !