உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா : கணவர் ரன்பீர் பற்றி பெருமைப்படும் ஆலியா பட்

ராமாயணா : கணவர் ரன்பீர் பற்றி பெருமைப்படும் ஆலியா பட்

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியினர் ரன்பீர் கபூர், ஆலியா பட். இருவரும் ஹிந்தித் திரையுலகத்தில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். ரன்பீர் கபூர் ராமர் ஆக நடித்துள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

'ராமாயணா' படத்தை ஐமேக்ஸ் தியேட்டர் ஒன்றில் ஆலியா பட் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. படம் பற்றிய தனது கருத்தை இன்ஸ்டா தளத்தில் பதிவு செய்துள்ளார் ஆலியா பட்.

அதில், “இதற்காக நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் அர்ப்பணித்தீர்கள்; ஆனாலும், அவளுக்காக இன்னும் அதே அளவு அன்பையும் அர்ப்பணிப்பையும் உங்களால் மிச்சம் வைத்திருக்க முடிந்தது. ரன்பீர், உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். திரையரங்குகளில் இந்த அற்புதமான அனுபவத்தை உருவாக்க, தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமையாக அர்ப்பணித்த ஒவ்வொரு நபரையும் நினைத்தும் நான் பெருமை கொள்கிறேன். சில கதைகள் நம் அனைவரையும் விடப் பெரியவை; 'ராமாயணம்' அத்தகைய கதைகளில் ஒன்று,” என அவர்களது குழந்தையுடன் ரன்பீர் இருக்கும் படப்பிடிப்புப் புகைப்படங்களைப் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !