உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ்

கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ்

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ல் திரைக்கு வந்த படம் கைதி. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கிய பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், போலா என்ற பெயரில் இப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். 2023ல் வெளியான அப்படத்தில் அவருடன் தபு முக்கிய வேடத்தில் நடித்தார். இந்நிலையில் இந்த படத்தை தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்போது கைதி படத்தை ஹிந்தியில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்த அஜய் தேவ்கன் மீது மும்பை நீதிமன்றத்தின் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. அதில், கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் ஒப்பந்தம் சம்பந்தமாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே கொடுத்த அஜய் தேவ்கன், மீதி தொகையை நிலுவையில் வைத்து விட்டார். அதனால் ஒப்பந்தம் போட்ட முழு தொகையையும் அவர் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்கள். இதை விசாரித்த மும்பை நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு உள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்ப்பளிக்கப்படும் என்று சொல்லி இந்த மனு மீதான விசாரணையை மறு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Vikranth
2026-03-29 18:45:46

யப்பா. நீங்க இப்படி ஒரு அருமையான கைதி படத்த ரீமேக் பண்ண அவர்கிட்ட கொடுத்து அதை கொடுமைபடுத்தி கெடுத்ததுக்காக இன்னொரு கேஸ போடுங்க சார்.