அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு
விஜய தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா நட்சத்திர தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றவர்கள், மீண்டும் தற்போது திரைப்படங்களில் வழக்கம் போல் நடிக்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் தான் கதையின் நாயகியாக நடிக்கும் மைஸா படம் மட்டுமின்றி விஜய் தேவர கொண்ட நாயகனாக நடித்து வரும் ரணபலி படத்திலும் தற்போது நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அனந்தபூரில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவர்கள் இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்படி அவர்கள் கோவிலுக்கு சென்ற போது அங்கே ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதை அடுத்து கூட்ட நெரிசலை கடந்து கோவிலுக்குள் ராஷ்மிகாவை பாதுகாப்புடன் விஜய் தேவரகொண்டா அழைத்து செல்லும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.