உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 50 கோடியை கடந்த ‛யூத்'

50 கோடியை கடந்த ‛யூத்'

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சின்ன பட்ஜெட் படங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் வெளியான, கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் 50 கோடி வசூலை தாண்டியுள்ளது. இது படத்தின் பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு வசூல் என்று கூறப்படுகிறது. அதேபோல், சிவகார்த்திகேயன் தயாரிக்க, சிவகுமார் முருகேசன் இயக்கிய தாய்கிழவி படத்தின் வசூலும் 75 கோடியை தாண்டியுள்ளது.

மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நடித்த வித்லவ் படமும், விக்ரம்பிரபுவின் சிறை படமும் இப்படி பல மடங்கு லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. இதனால், சின்ன பட்ஜெட் படங்கள் மீது தமிழ் சினிமாவின் கவனம் திரும்பியுள்ளது. 5 முதல் 10 கோடிக்குள் படம் தயாரித்தால், அதில் நல்ல கதை இருந்தால் கொஞ்சம் பப்ளிசிட்டி செய்தால் படத்தின் வெற்றி உறுதி. அதைதான் இந்த 4 படங்களும் எடுத்து காண்பித்து இருக்கின்றன.

20 கோடி, 30 கோடி பட்ஜெட், அதற்கு மேல் பட்ஜெட் என்றால் ரிஸ்க். இப்போது சாட்டிலைட், டிஜிட்டல் விலை போவதில்லை. சின்ன பட்ஜெட் படங்களே வெற்றிக்கு உத்திரவாதம் என்ற நிலை கோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த 4 படங்களின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளும் விற்கப்பட்டுள்ளதால் இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் செம ஹேப்பியாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !