உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேர்தல் நேரத்தில் களமிறங்கும் நட்டியின் ‛டிஎன் 2026' படம்

தேர்தல் நேரத்தில் களமிறங்கும் நட்டியின் ‛டிஎன் 2026' படம்

நடிகர் தம்பி ராமையா கதையில், அவர் மகன் உமாபதி இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள ‛டிஎன் 2026' படம் ஏப்ரல் 10ல் வெளியாகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் பார்க்கும்போது இது அரசியல் கதை, அரசியல்வாதிகளை சீண்டும் கதை என தெரிகிறது. இதனால், தேர்தல் சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இதில் , சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோரும் நடித்துள்ளனர். ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோரும் இருக்கிறார்கள்.

ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தின் தலைப்பு, கதை, கரு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சில சாயல்களில் நட்டி கேரக்டர் தவெக தலைவர் விஜய் மாதிரி இருக்கிறது. இன்னொரு பக்கம் வேறு சில அரசியல்வாதிகளை நியாபகப்படுத்துகிறது. அடுத்து வரும் டீசர், டிரைலர், பட விழாவில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !