உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதோ

எல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதோ

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' . ஒரு வழியாக இப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதியன்று திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

எல்லாவற்றையும் காப்பீடு செய்யக்கூடிய ஒரு உலகில், காதலுக்கே காப்பீடு வழங்கும் ஒரு நிறுவனம் தோன்றுகிறது. ஒரு ஆப்(App), மனவேதனையை முன்கூட்டியே கணித்து, கணக்கிடப்பட்ட அபாயத்தின் மூலம் உறவுகளை கட்டுப்படுத்துகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் குரல், காதல் என்பது வெறும் தரவு மட்டுமே என்று நம்புகிறான். ஆனால், அவன் அந்த ஆப் ஆபத்தை உணரும் போது எல்லாம் மாறுகிறது. அந்த ஆப், அவனுடைய காதலுக்கு எதிரியாக மாறி, அவர்கள் இருவரையும் பிரிக்கத் தொடங்குகிறது.

2040ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், உலகம் முழுவதும் நம்பும் அந்த ஆப்பை தேர்ந்தெடுப்பதா? அல்லது உணர்வுபூர்வமான காதலை தேர்ந்தெடுப்பதா? என்கிற கடினமான முடிவை அவன் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது இதுதான் இந்த படத்தின் கதை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !