பாலிவுட் நடிகர் சுனில் ஆனந்த் காலமானார்
பாலிவுட்டின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவராக இருந்தவர் நடிகர், தயாரிப்பாளர் தேவ் ஆனந்த். இவரது மகன் சுனில் ஆனந்த். 1984ம் 'ஆனந்த் அவ்ர் ஆனந்த்' திரைப்படத்தின் மூலம் சுனில் ஆனந்தை நடிகராக்கினார். தொடர்ந்து 'கார் தீப்' மற்றும் 'மை தேரே லியே' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
பின்னர் நடிப்பிலிருந்து விலகி, தனது தந்தையின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான நவ்கேதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்து வந்தார். 2011ம் ஆண்டு தேவ் ஆனந்த் மறைந்த பிறகு சில படங்களை தயாரித்தார். அந்த படங்கள் தோல்வி அடைந்து பெரும் இழப்பை சந்தித்தார்.
பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் லண்டனில் தனது மகள் ஜீனா நரங் வீட்டில் வசித்து வந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார் என ஜீனா ரங் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 70.
இது தொடர்பாக ஜீனா நரங் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுனில் ஆனந்தின் மறைவால் எங்கள் குடும்பம் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தச் கடினமான காலகட்டத்தில் நீங்கள் அளிக்கும் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரமான சூழலில் எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.