உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இலங்கைத் தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'பொம்மை'

இலங்கைத் தமிழர்கள் இணைந்து உருவாக்கிய 'பொம்மை'

இலங்கைத் தமிழர்கள் இணைந்து 'பொம்மை' என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை நவயுகா குகராஜா இயக்கி உள்ளார், மதுனிஹிரன்யா அழகக்கோன் வற்சு ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ரஜனிகாந்த் இசை அமைத்துள்ளார்.

நவயுகா குகராஜா, யசோதா , திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா,ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா உள்ளிட்ட இலங்கை கலைஞர்கள் நடித்துள்ளனர் பல்வேறு நாடுகளில் பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்ற இந்த படம் விரைவில் தமிழ்நாட்டில் வெளியாகிறது .

இதுகுறித்து படத்தை தயாரித்துள்ள பாஸ்கரன் கந்தையா கூறுகையில் படத்தை பிரான்ஸ், கனடா என பல நாடுகளில் இருந்து வந்து பார்த்தார்கள். அதில் கனடாவில் இருந்து வந்த ஒருவர் உடனே படத்தை தங்கள் நாட்டில் திரையிட ரைட்ஸ் வேண்டும் என கேட்டார். அந்தளவுக்கு எல்லோரிடமும் நேர்மறை கருத்துக்களை இந்த திரைப்படம் பெற்றுள்ளது . ஈழத்தமிழ் படைப்புகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பது தான் தனது முதல் எண்ணம்.

பொம்மை படத்தை பார்த்தால் தான் இலங்கை தமிழ் மக்களின் வலி எல்லோருக்கும் புரியும். சுவீடன் நாட்டின் லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட வி ழாவிலும் விருதுகளை வென்றுள்ளது. அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்வாகியுள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !