மீண்டும் கதை நாயகன் ஆன ஆனந்த் பாபு
ADDED : 189 days ago
சிசிசி பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள படம் 'லைப் பைலட்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி படத்தை தயாரித்தும் இருக்கிறார் சைதன்யா சங்கரன். இதில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக ஆனந்தபாபு நடித்திருக்கிறார். நாயகியாக சஜிதா அறிமுகமாகி நடித்திருக்கிறார். மற்றும் மகாநதி சங்கர், தீபக் நம்பியார், சூர்யா, சோனியா , அனு பிரென்சி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜான் விக்டர் ஒளிப்பதிவு செய்துள்ளார், பாலச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் சைதன்யா சங்கரன் கூறும்போது, ''இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நிஜத்தை பிரதிபலிக்கும் படமாக இது இருக்கும்'' என்றார். படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது என்றார்.