அரசியல் குறித்த கேள்விக்கு ரஜினி கொடுத்த பதில்
ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்தபடியாக சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். சமீபத்தில் தவெக.,வின் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, ‛‛ரஜினியை அரசியலுக்கு வர விடாமல் தடுத்தது திமுக., தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு ரஜினி, ஆதவ்வின் கருத்து உண்மையல்ல என கூறியவர் காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று தெரிவித்து இருந்தார்.
இப்படியான நிலையில் இன்று விமான நிலையத்தில் மீடியாக்களை சந்தித்தார் ரஜினி. அப்போது ஜெயிலர்-2 படப்பிடிப்பு முடியப் போகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள். கமலுடன் நான் இணைந்து நடிக்க போகும் படம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது என்று தெரிவித்தார். அப்போது ரஜினியிடத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, வணக்கம் என்று சொன்ன ரஜினி இடத்தில், தேர்தல் பிரசாரத்துக்கு செல்வீர்களா? என்று கேட்ட இன்னொரு கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்று பதில் கொடுத்தார்.