உலக அரங்கில் மீண்டும் ராஷ்மிகா
ADDED : 131 days ago
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நீண்டகால காதலரும், நடிகருமான விஜய் தேவரகொண்டாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மேலும், கடந்த 2024ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற அனிமே விருதுகள் விழாவில் முதல் மற்றும் ஒரே இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ராஷ்மிகா, தற்போது மீண்டும் கரஞ்சிரோல் அனிமே விருதுகள் 2026 விழாவிலும் பங்கேற்றுள்ளார். இதற்காக தற்போது ராஷ்மிகா ஜப்பானில் உள்ளார். இதற்கு முன்பு வேறு எந்த இந்தியரும் இந்த கவுரவத்தை பெற்றதில்லை. இதை ராஷ்மிகா இரண்டாவது முறையாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.