உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேஷன் ஐகானாக உருவெடுக்கும் ஸ்ரீலீலா

பேஷன் ஐகானாக உருவெடுக்கும் ஸ்ரீலீலா

தமிழில் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்த ஸ்ரீலீலா, தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இது தவிர, ஹிந்தியில் கார்த்திக் ஆரியன் நடிக்கும் படம், அனுராக் பாசு இயக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீலீலா.

இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது பேஷன் உலகுக்குள் தான் அடியெடுத்து வைப்பதாக தெரிவித்திருக்கிறார். தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலை உருவாக்கி வருவதாக கூறும் ஸ்ரீலீலா, எதிர்காலத்தில் இளம் பெண்களுக்கான ஒரு பேஷன் ஐகானாக உருவெடுக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !