ஏப்ரல் 10ல் ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி
ADDED : 9 hours ago
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், முனீஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் தாய் கிழவி. சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படம் பிப்ரவரி 27ஆம் தேதி திரைக்கு வந்தது. 10 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இதுவரை பாக்ஸ் ஆபீஸில் 75 கோடி வசூலித்திருக்கிறது . இந்நிலையில் இந்த தாய்கிழவி படம் வருகின்ற ஏப்ரல் பத்தாம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. தியேட்டரில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் ஓடிடி பார்வையாளர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.