'யூத் 2' உருவாகுமா? கென் கையில் முடிவு
கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்த 'யூத்' படம் பெரிய ஹிட்டாகி உள்ளது. உதவி இயக்குனராக இருந்த கருப்பையா தயாரித்த இந்த படம் 60 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல். இது படத்துக்கு கிடைத்த பெரிய வெற்றியால், பல மடங்கு லாபமும் கிடைத்தது. யூத் படம் குறித்து பேசிய நடிகர் விஷால் 'ராஜமுந்திரி தாண்டி ஒரு சின்ன ஊரில் கூட யூத் படத்தின் போஸ்டர் பார்த்தேன். அது படக்குழுவுக்கு கிடைத்த பெருமை' என்றார்.
யூத் படம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என பலருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்தால், அந்த முடிவு இயக்குனர், ஹீரோ கென் கையில் இருக்கிறது. அவரும் இந்த படத்தில் ஒரு பார்ட்னர். வியாபார அடிப்படையில் சம்பளம் வாங்கி சந்தோஷமாக இருக்கிறார். அவர் மனசு வைத்தால் முதல் பாகத்தை விட, பெரியளவில் 2ம் பாகம் உருவாகும் என்கிறார்கள். அடுத்த படம் குறித்து இன்னமும் கென் முடிவெடுக்கவில்லையாம்.