உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்யாணம் ஆயிடுச்சு; 4 குழந்தையும் இருக்கு ; சினிமாவுக்கு முழுக்கு : த்ரிஷா கொடுத்த திடீர் ‛‛ஷாக்''

கல்யாணம் ஆயிடுச்சு; 4 குழந்தையும் இருக்கு ; சினிமாவுக்கு முழுக்கு : த்ரிஷா கொடுத்த திடீர் ‛‛ஷாக்''

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. அவரும் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் கடந்த மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் இருவரையும் சேர்த்து பல்வேறு செய்திகள், யூகங்கள், வதந்திகள் என வந்து கொண்டே இருக்கிறது.

கடந்த சில தினங்களாக சினிமாவை விட்டு விலக த்ரிஷா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன. அது பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலரும் கருத்துக்களைப் பதிவு செய்தனர். அவற்றிற்குப் பதிலளிக்கும் விதத்தில் காட்டமான பதிவு ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா.

அதில் “கேள்விப்பட்டவரை, நான் திரைப்படங்களை விட்டு விலகிவிட்டேனாம்; ஒரு பணக்கார தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு, நேற்றுதான் இரண்டு வயதை எட்டிய நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேனாம்! வேறு எதையாவது நான் இதில் சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய 'கற்பனைக் கதைக்கான ஒதுக்கீடு' இத்துடன் நிறைவடைந்துவிட்டதா?” என்று பதிவிட்டுள்ளார்.

பொதுவாக தன்னைப் பற்றிய பல செய்திகளைக் கடந்து போகும் த்ரிஷா, தற்போது அதற்கு காட்டமாக பதிலளித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !