உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'ஏஏ 22' டைட்டில் அறிவிப்பு

அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'ஏஏ 22' டைட்டில் அறிவிப்பு

அட்லி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிப்பில் அல்லு அர்ஜுனின் 22வது படம் உருவாகி வருகிறது. இப்படம் 2025 ஜுன் மாதம் ஆரம்பமான போது சில அப்டேட்கள் வந்தன. அதன்பின் படம் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அனைத்தையும் ரகசியமாக காத்து வருகின்றனர்.

நாளை ஏப்ரல் 8ம் தேதி இப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் என்பதால் படம் பற்றிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் டீசர் அல்லது டைட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகின.

அதை உறுதி செய்யும் வகையில் நாளை ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணிக்கு படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருவதால் அது சம்பந்தப்பட்ட தலைப்பாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !