உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நஷ்டத்தை திருப்பிக் கொடுத்த அக்ஷய் குமார் : லாபத்தில் பங்கு கேட்ட தபு

நஷ்டத்தை திருப்பிக் கொடுத்த அக்ஷய் குமார் : லாபத்தில் பங்கு கேட்ட தபு

பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில், வரும் ஏப்ரல் 16ம் தேதி வெளியாக இருக்கும் படம் பூத் பங்களா. தபு, வாமிகா கபி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஏக்தா கபூர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் பேசியபோது, “இதற்கு முன்னதாக முதன்முறையாக நான் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை தயாரித்தேன். அந்த படம் சரியாக போகவில்லை. உடனே அக்ஷய் குமார் என்னை அழைத்து ஒரு மிகப்பெரிய தொகையை செக் போட்டு நஷ்ட ஈடாக நான் கேட்காமலேயே என்னிடம் கொடுத்தார். என் 30 வருட சினிமா பயணத்தில் இப்படி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை” என்றார்.

உடனே அங்கிருந்த நடிகை தபு, “அப்படி என்றால் நாம் இணைந்து பணியாற்றிய 'க்ரூ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் கிடைத்த லாபத்தில் எங்களது பங்கை எப்போது தரப் போகிறீர்கள் ?” என்று ஜாலியாக கேட்டார்.

அதற்கு ஏக்தா கபூர், “எப்போதாவது தயாரிப்பாளர் இப்படி லாபத்தில் யாருக்காவது பங்கு தந்திருக்கிறார்களா என்ன ?” என்று கேட்டதும் அதற்கு உண்மைதான் என்று தலையசைத்து ஆமோதித்தார் தபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !