உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாரணாசி : 'கவுண்ட் டவுன்' ஆரம்பித்து வைத்த கீரவாணி

வாரணாசி : 'கவுண்ட் டவுன்' ஆரம்பித்து வைத்த கீரவாணி

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இப்படம் அடுத்த வருடம் இதே நாளில் ஏப்ரல் 7ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

படம் வெளியாக சரியாக இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி '365' என்று மட்டும் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் முலம் படத்தின் 'கவுண்ட் டவுன்'ஐ அவர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதேசமயம் படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனர் ராஜமவுலியின் மகனுமான கார்த்திகேயா, “அது சரி, பாடலை எப்போது டெலிவரி செய்வீர்கள் ?” என்று கேட்டு கமெண்ட் செய்துள்ளார்.

2027ல் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் ஒன்றாக இந்தப் படம் உள்ளது. இப்படத்திற்காக அவ்வப்போது ஹாலிவுட் படங்களைப் போல உலக அளவில் புரமோஷன் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !