உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வட அமெரிக்கா முன்பதிவு தற்காலிக நிறுத்தம் : பெத்தி ரிலீஸ் தேதியில் நீடிக்கும் குழப்பம்

வட அமெரிக்கா முன்பதிவு தற்காலிக நிறுத்தம் : பெத்தி ரிலீஸ் தேதியில் நீடிக்கும் குழப்பம்

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் பெத்தி. புச்சிபாபு சனா இயக்கியுள்ள இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். விளையாட்டை மையமாக வைத்து ஒரு பீரியட் படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே மார்ச் 27ம் தேதி இந்த படத்திற்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் ஏப்ரல் 30ம் தேதிக்கு புதிய ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களாகவே இந்த தேதியிலும் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்றும் மீண்டும் தள்ளிப் போகலாம் என்றும் சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் நடிகர் ராம் சரண் கூட சமீபத்தில் இந்த படத்தின் ரிலீசில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறியிருந்தார்.

தற்போது வட அமெரிக்காவில் இந்த படத்திற்காக முன்பதிவு செய்து வந்த நிறுவனம் தற்போது தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்துள்ளது. பெத்தி படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தங்களுக்கு வந்த தகவலின்படி மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக முன்பதிவை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக வட அமெரிக்க விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பெத்தி திரைப்படம் மீண்டும் தள்ளிப் போகிறதா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !