உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும் திரை வாழ்க்கையும்

மறைந்த ஆஷா போஸ்லேவின் பிறப்பும் திரை வாழ்க்கையும்


​பிறப்பு: செப்டம்பர் 8, 1933 அன்று மகாராஷ்டிராவின் சாங்லியில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் ஒரு புகழ்பெற்ற செவ்வியல் இசைக்கலைஞர் மற்றும் நாடக நடிகர்.

சகோதரிகள்: புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் இவரது மூத்த சகோதரி ஆவார். மீனா, உஷா மற்றும் சகோதரர் ஹிருதயநாத் ஆகியோரும் இசைத்துறையில் உள்ளனர்.

இசைப்பயணம்: தனது 10 வயதிலேயே (1943) மராத்தியத் திரைப்படத்தில் பாடத் தொடங்கினார்.

​இசைச் சாதனை

ஆஷா போன்ஸ்லேவின் குரல் மிகவும் நெகிழ்வுத்தன்மை (Versatility) கொண்டது. அவர் மெல்லிசை, கஜல், பாப், நாட்டுப்புறப் பாடல்கள் என அனைத்து வகைகளிலும் ஜொலித்தார். ​பன்மொழிப் பாடகரான இவர், தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம் என 20க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 12,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

​தமிழில் ஆஷா:

தமிழில் குறைவான பாடல்களே பாடியிருந்தாலும், அவை அனைத்தும் காலத்தால் அழியாதவை. ​இளையராஜா இசையில், செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்), நீ பார்த்த பார்வை (ஹே ராம்), வான் மேகம் (புன்னகை மன்னன்), ''ஓ பட்டர்பிளை'' (மீரா), ''சாத்து நடை சாத்து'' (சேதுபதி ஐபிஎஸ்), ​ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கொஞ்சும் மைனாக்களே (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்), வெண்ணிலா வெண்ணிலா (இருவர்), ''செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்'' (அலைபாயுதே), வித்யாசாகர் இசையில், ''கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்'' (சந்திரமுகி) உள்ளிட்ட சில தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார்.

​முக்கியக் கூட்டணி: ஆர்.டி. பர்மன் (R.D. Burman) இசையில் இவர் பாடிய துள்ளலிசைப் பாடல்கள் இன்றும் உலகப்புகழ் பெற்றவை. அவரையே 2வது கணவராக ஏற்றுக்கொண்டார் ஆஷா போஸ்லே.
​விருதுகளும் அங்கீகாரமும்

கின்னஸ் சாதனை: இசை வரலாற்றில் அதிக பாடல்களைப் பாடியதற்காக 2011-ல் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

பத்ம விபூஷண்: இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான 'பத்ம விபூஷண்' (2008) வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

​தாதா சாகேப் பால்கே விருது: இந்தியத் திரையுலகின் உயரிய விருதான இதை 2000-ஆம் ஆண்டு பெற்றார்.

தேசிய விருதுகளை இருமுறையும் (உம்ராவ் ஜான், இஜாசத்), ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.


1987ம் ஆண்டு “நைட்டிங்கேல் ஆப் ஆசியா விருது” வழங்கப்பட்டது.

1989 மற்றும் 1999ம் ஆண்டுகளில் “லதா மங்கேஷ்கர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.

1997ம் ஆண்டு “ஸ்கிரீன் வீடியோகான் விருது” வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டு “சேனல் வி விருது” வழங்கப்பட்டது.

1997 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கான “எம் டி வி விருது” வழங்கி கௌரவப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

2000ம் ஆண்டு “மில்லேனியம் சிங்கர் விருது”, “ஜீ கோல்டு பாலிவுட் விருது” ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

2002ம் ஆண்டு “பி பி சி வாழ்நாள் சாதனையாளர் விருது”டன் “ஜீ டிவி விருது”, “ஸ்கிரீன் வீடியோகான் விருது”, “சான்சுய் திரைப்பட விருது”, “ஸ்வரலயா யேசுதாஸ் விருது” போன்ற விருதுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றார்.

2008ம் ஆண்டு “பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கின்றார்.

'பெடரேஷன் ஆப் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி' மூலம் வழங்கிய “லிவிங் லெஜண்ட் விருது” உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்று ஒரு சாதனையாளராக வலம் வந்திருக்கின்றார் ஆஷா போஸ்லே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !