உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜான்வி கபூரின் 'சுட்டமல்லி' பாடல் டீப் பேக் சர்ச்சைக்கு ராம்கோபால் வர்மா எதிர்வினை!

ஜான்வி கபூரின் 'சுட்டமல்லி' பாடல் டீப் பேக் சர்ச்சைக்கு ராம்கோபால் வர்மா எதிர்வினை!


தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் - ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான 'தேவரா பார்ட்- 1' படத்தின் 'சுட்டமல்லி' பாடலில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி ஜான்வி கபூரை செயற்கை நுண்ணறிவு மூலம் இழிவான முறையில் சித்தரித்து டீப் பேக் வீடியோ ஒன்றை சமீபத்தில் யாரோ விஷமிகள் சோசியல் மீடியாவில் வெளியிட்டார்கள். இதையடுத்து ஜூனியர் என்டிஆர் அந்த அருவருப்பான வீடியோவை கடுமையாக கண்டித்ததுடன் இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அதன் பிறகு சிரஞ்சீவி, குஷ்பூ, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலரும் அதை கண்டித்தார்கள்.

இந்த நிலைகள் தற்போது இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் அது குறித்து ஒரு செய்தியை தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் பற்றிய தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, பிரபலங்கள் அனைவரும் இணைந்து செய்த ஒரே காரியம், அந்தத் தவறான இணைப்பிற்கு விளம்பரம் கொடுத்து, கோடிக்கணக்கான மக்கள் அதனைப் பார்க்க வைத்ததுதான்.

அதைவிட, குற்றவாளியைப் பிடிப்பதில் கவனம் செலுத்தி, அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பதே புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக, அவர்கள் டுவீட் செய்து, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்திற்கும் அந்தத் தவறான உள்ளடக்கத்திற்கும் மிகப்பெரிய கவனத்தைக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இதுவும் ஒரு குற்றமே என்று குறிப்பிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !