உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அட்லி இயக்கும் 'ராக்கா' தமிழ் திரைப்படமா? ஆஸ்கர் கொண்டு செல்வதாக உறுதி

அட்லி இயக்கும் 'ராக்கா' தமிழ் திரைப்படமா? ஆஸ்கர் கொண்டு செல்வதாக உறுதி


ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் 'ராக்கா' படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்நிலையில் இயக்குனர் அட்லி கூறிய சில சுவாரஸ்யமான கருத்துக்கள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை பாராட்டியதுடன், ராக்கா படத்தை ஆஸ்கர் விருது வரை கொண்டு சென்று தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாக உறுதியளித்தார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு தெலுங்கு நடிகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் நிலையில், ராக்கா உண்மையில் ஒரு தமிழ் திரைப்படமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் படமாக்கப்படுகிறதா? அல்லது தெலுங்கில் டப்பிங் செய்யப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், ராக்கா படத்தை 2027 மற்றும் 2028ம் ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளியிடுவதா, அல்லது 2028ல் நேரடியாக ஒரே திரைப்படமாக வெளியிடுவதா என்பது குறித்து படக்குழுவிற்குள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !