'ரணபாலி' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதேன்? காரணத்தை சொன்ன ராஷ்மிகா!
விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ள புதிய படம் 'ரணபாலி'. ராகுல் சங்கிருதயன் இயக்கியுள்ள இப்படம் வருகிற 16ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க தான் ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார். அதில், இயக்குனர் ராகுல் சங்கிருதயனுக்காகவே இப்படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
காரணம், ராகுல் மிகவும் முதிர்ச்சியான மற்றும் திறமையான இயக்குனர். அதனால் அவருடன் நீண்ட நாட்களாகப் பணியாற்ற விரும்பியதாகவும், அந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் தேவரகொண்டா இதில் நாயகனாக நடிக்கிறார் என்பதை அறிந்ததும், உடனடியாக இப்படத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ள ராஷ்மிகா, தானும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்து படப்பிடிப்பில் பங்கேற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், இப்படம் மேலும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது என்றும் ராஷ்மிகா பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், இப்படத்தில் தனது ஜெயம்மா என்ற கதாபாத்திரம் வலுவான உணர்வுபூர்வமான ஆழத்துடன் சிறப்பாக எழுதப்பட்டுள்ளதாகவும், அது பார்வையாளர்களுடன் நன்றாக ஒன்றிணையும் என்றும் கூறியுள்ளார் ராஷ்மிகா.