உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மருதநாயகம் துாசிதட்டி எடுக்கப்படுமா : கமல்ஹாசன், விஜய்சேதுபதி நடிப்பார்களா?

மருதநாயகம் துாசிதட்டி எடுக்கப்படுமா : கமல்ஹாசன், விஜய்சேதுபதி நடிப்பார்களா?

சென்னையில் நடந்த பத்தா பட வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் அட்லி, எனக்கு கமல்ஹாசன், விஜய் சேதுபதியை இணைத்து வைத்து படம் இயக்க வேண்டும். மருதநாயகம் படத்தில் இருவரையும் இணைக்கவும் ஆசை. அது சரியான நேரத்தில் நடக்கலாம். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது என கூறினார். இதனால், மருதநாயகம் மீண்டும் உயிர் பெற வாய்ப்பு என கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் கனவு படங்களில் ஒன்று மருதநாயகம். சென்னை பிலிம் சிட்டியில் மறைந்த அன்றைய முதல்வர் கருணாநிதி, மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆகியோர் 1997ம் ஆண்டு இந்த படத்தை தொடங்கி வைத்தனர். ஆனால், பைனான்ஸ் சிக்கல்கள் காரணமாக படத்தை கமலால் தொடர முடியவில்லை. பல பேட்டிகளில், பேச்சுகளில் மருதநாயகம் குறித்து கமல் பேசியிருப்பார். சில ஆண்டுகளுக்குமுன்பு கூட ஒரு ஹாலிவுட் கம்பெனி உதவியுடன் மருதநாயகத்தை எடுக்க முயற்சித்தார். அதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் மருதநாயகம் குறித்து அட்லி பேசியிருப்பது கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அட்லிக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. அந்த வகையில் பைனான்சியர்களை பிடித்து அவர் படம் இயக்க வாய்ப்புள்ளது. ஆனால், தனது கனவு படத்தை அட்லி இயக்க கமல்ஹாசன் சம்மதிப்பாரா? அதில் விஜய் சேதுபதி நடிக்க ஓகே சொல்வரா என்பது இப்போதைய கேள்வி.

இப்போதைக்கு அட்லியும் அல்லு அர்ஜூனின் ராக்கா படத்தில் பிஸியாக உள்ளார். அடுத்து ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளதாக தகவல். அதனால், மருதநாயகம் உருவாக சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. 17 ம் நுாற்றாண்டில் ராமநாதபுரத்தில் பிறந்து, பின்னர் யூசுப்கான் ஆக மதம் மாறி, தளபதியாக இருந்து கடைசியில் ஆங்கிலேயர்களால் துாக்கிலிடப்பட்டவர் மருதநாயகம் என்ற கான் சாகிப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !