உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பாலிவுட் படம் இயக்கிய மனோபாலா

பிளாஷ்பேக்: பாலிவுட் படம் இயக்கிய மனோபாலா


தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் புகழ்பெற்றவர் மனோபாலா. சமீபத்தில் மறைந்தார். அவர் ஒரே ஒரு பாலிவுட் படத்தை இயக்கி உள்ளார். அது தமிழில் அவர் இயக்கிய 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' என்ற படத்தின் இந்தி ரீமேக்கான 'மேரா பட்டி சிர்ப் மேரா ஹேய்' என்ற படமாகும். இந்த படத்தில் ஜிதேந்தரா, ரேகா, ராதிகா நடித்தார்கள்.

1989ம் ஆண்டு கலைமணி இந்த படத்தின் கதையை எழுதி அதை 'அக்கா புருஷன்' என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டார். இதற்காக விஜயகாந்திடம் கால்ஷீட்டும் வாங்கினார். ஆனால் ஆக்ஷன் ஹீரோவான விஜயகாந்த் இந்த மாதிரி கதையில் நடித்தால் படம் ஓடாது என்று யாரும் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை.

இந்த நிலையில் மனோபாலா இந்த படத்தை கையில் எடுத்தார். தலைப்பை 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' என்று மாற்றினார். அப்போது 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தில் இடம்பெற்று மக்கள் மனதில் பதிந்த பாடலையே தலைப்பாக்கினார். அந்த படத்தில் நடித்த சுஹாசினியை நாயகி ஆக்கினார்.

'கொடுமைக்கார மனைவி ரேகா, அன்பான தோழி சுஹாசினி ஆகிய இருவரிடமும் கிடந்து தவிக்கும் விஜயகாந்த்' இதுதான் படத்தின் ஒன் லைன். பலமான திரைக்கதை, மற்றும் வசனங்கள் மூலமும், மூவரின் நடிப்பின் மூலமும் படம் வெற்றி பெற்றது. பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் ஆனது. இந்தி ரீமேக்கை மட்டும் மனோபாலா இயக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !