உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதன் முதலில் இரண்டு வேடங்களில் நடித்த நடிகை

பிளாஷ்பேக்: முதன் முதலில் இரண்டு வேடங்களில் நடித்த நடிகை


தமிழ் சினிமாவில் முதன் முதலில் இரட்டை வேடங்களில் நடித்தவர் பி.யூ. சின்னப்பா தேவர். அதே போல முதன் முதலில் இரண்டு வேடங்களில் நடித்த நடிகை எஸ்.டி.சுப்புலட்சுமி. படம் 'குசேலா'. அன்றைய முன்னணி இயக்குனரும் எஸ்.டி.சுப்புலட்சுமியின் கணவருமான கே.சுப்ரமணியம் இந்த படத்தை இயக்கினார், இந்த படத்தில் சுப்புலட்சுமி, கிருஷ்ணராகவும், கிருஷ்ணனின் நண்பரான குசேலனின் மனைவியாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். ஒருவரே ஒரே படத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் நடித்ததும் இந்தப் படத்தில்தான்.

பாபநாசம் சிவன் குசேலனாக நடித்தார், கே.கே.பார்வதி ருக்மணியாகவும், இளம் கிருஷ்ணராக பால சரஸ்வதியும், சத்யபாமாவாக பூர்ணிமாவும் நடித்தார்கள். பாபநாசம் சிவன் இசை அமைத்தார், பாடல்களை எழுதினார். படத்தில் 30க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றிருந்தது.

கடவுள் கிருஷ்ணருக்கும் 27 குழந்தைகளுக்கு தந்தையான ஏழை குசேலனுக்கும் இருந்த நட்பை சொன்ன இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !