கன்னக்குழியா, புதைகுழியா: வைரலாகும் நயன்தாரா பாடல்
நடிகை நயன்தாரா தன்னை விட வயதில் மிகவும் குறைந்த நவீன் ஜோடியாக நடிக்கும் படம் 'ஹாய்'. வயதில் மூத்த பெண்ணை ஒரு இளைஞன் காதலிப்பதும், அதனால் வரும் பிரச்னைகளும்தான் படம். காதலுக்கு கண்ணில்லை என்பதுபோல் வயதுமில்லை என்பது படம் சொல்லப்போகும் மெசேஜ்.
இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார். படத்தில் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார்.
தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. “கன்னக்குழியா, புதைகுழியா குழப்புறியே.. கண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழையுறியே, கருப்பட்டியா உன்னை எனக்குள்ள விழுங்குறியே” என்ற தொடங்கும் இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். பாடலை இயக்குனர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.
முழுக்க நயன்தாராவின் அழகை புகழும் இந்த பாடல் தற்போது வைரலாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மெலடியான ஒரு காதல் பாடல் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். வயது வித்தியாசம் இருந்தாலும் கவின் நயன்தாரா ஜோடி பொருத்தமாக இருப்பதாகவும் புகழ்ந்து வருகிறார்கள்.