வாசகர்கள் கருத்துகள் (1)
தமிழ் நாட்டில் உள்ள ஏமாற்று வித்தை காற்ரகள் போல் அல்லாமல் மஹாராஷ்டிராவில் கிறிஸ்த்தவரே ஆனாலும் அவ்ரகள் சிவாஜி மேல் கொண்ட பக்தி உண்மையானதே. அதில் சந்தேகம் வேண்டாம்.
நடிகை ஜெனிலியா தமிழில் 'சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது அப்பாவித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பிறகு பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார்.
இந்த நிலையில் தற்போது அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மராத்தியில் வீரசிவாஜியின் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள 'ராஜா சிவாஜி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக வித்யா பாலன் மற்றும் ஜெனிலியா இருவரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் ரித்தேஷ் தேஷ்முக் பேசும்போது, இந்த திரைப்படம் தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும் சத்ரபதி சிவாஜியின் மீது தனக்குள்ள அபிமானம் குறித்தும் பேசினார். அவர் பேசப்பேச அவருக்கு பின்னால் நின்றிருந்த அவரது மனைவி நடிகை ஜெனிலியா கண்கலங்கியபடி அவரது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அது ரித்தேஷ் தேஷ்முக் இந்த படத்தை உருவாக்குவதற்காக பட்ட கஷ்டங்களை நினைத்தா அல்லது சத்ரபதி சிவாஜியின் மீது அவர் கொண்ட அபிமானத்தினாலா என்பது தெரியவில்லை.
தமிழ் நாட்டில் உள்ள ஏமாற்று வித்தை காற்ரகள் போல் அல்லாமல் மஹாராஷ்டிராவில் கிறிஸ்த்தவரே ஆனாலும் அவ்ரகள் சிவாஜி மேல் கொண்ட பக்தி உண்மையானதே. அதில் சந்தேகம் வேண்டாம்.