உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாற்றம் தேவையில்லை என அஜித் கூறினாரா... அவர் தரப்பு விளக்கம்

மாற்றம் தேவையில்லை என அஜித் கூறினாரா... அவர் தரப்பு விளக்கம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்று(ஏப்., 23) காலை துவங்கியது. திமுக., தலைமையிலான கூட்டணி ஒருபக்கம், அதிமுக., தலைமையிலான கூட்டணி மற்றொரு பக்கம், எப்போதும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் சீமான் ஒருபக்கம், புதிய வரவாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு பக்கம் என நான்குமுனை போட்டியை இந்த தேர்தல் சந்தித்துள்ளது. குறிப்பாக விஜயின் வருகை தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தமிழகத்தில் ஓட்டுப்பதிவு துவங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமாய் ஓட்டளித்து வருகின்றனர்.

அதேப்போல் திரைப்பிரபலங்களும் காலை முதலே ஆர்வமாய் ஓட்டளித்து வருகின்றனர். நடிகர் அஜித் காலையில் முதல் ஆளாய் திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். ஓட்டளித்த பின் மாற்றம் தேவையில்லை என அஜித் கூறியதவாக செய்தி பரவியது. இதுதொடர்பாக ஓட்டளித்த முதல்வர் ஸ்டாலினிடம் கூட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‛நல்ல கருத்து தானே சொல்லியிருக்கிறார், நல்லது தான்' என பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அஜித் தரப்பில் கூறியதாவது, ‛‛மாற்றம் தேவையில்லை என ஓட்டு பதிவு செய்ய வந்த நடிகர் அஜித் கூறவில்லை. தவறான தகவல்களை பரப்புகின்றனர். அஜித் எதுவுமே பேசவில்லை'' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !