உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ்

மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்குனர் ஆக ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது கர முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55வது படத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து இவர் கைவசம் நடிகராக படங்கள் உள்ளன. இதற்கிடையே மீண்டும் ஒரு படத்தை இயக்கவும் தயாராகி வருகிறார் தனுஷ்.

இதில் நடிகை மிருணாள் தாகூரை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து தயாரித்து, இயக்கவுள்ளாராம். இந்த படம் 60 - 70 காலகட்டத்தில் பீரியட் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது என்கிறார்கள். தனுஷ் மூலம் மிருணாள் தாக்கூர் தமிழில் அறிமுகமாகிறார். இவர்கள் இடையே தான் காதல் தொடர்பான கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதை மிருணாள் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ஆகுயர்தான்
2026-04-23 14:32:00

எச்சரிக்கை, அடுத்த ஆண்டுகளில் மீ டூ புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்