உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரிஷ்யம் 3 ஓடிடி உரிமை பிரச்சினை : டில்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரிஷ்யம் 3 ஓடிடி உரிமை பிரச்சினை : டில்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மலையாளத்தில் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியை பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் திரிஷ்யம் 3 என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் மே 21ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றி கடந்த 2020ல் ஒளிபரப்பு செய்தது. இதன் அடுத்த பாகம் உருவாகும்போது அந்த உரிமையும் தங்களுக்கு தான் தர வேண்டும் என ஏற்கனவே தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸுடன் ஒப்பந்தமும் செய்து இருந்தது.

ஆனால் தற்போது ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வேறு சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று கூறியுள்ள அமேசான் நிறுவனம் டில்லி உயர் நீதிமன்றத்தில் திரிஷ்யம்-3க்கான தங்களது ஓடிடி உரிமையை மூன்றாவது ஒரு நபருக்கு விற்கக் கூடாது என்று தடை விதிக்கும்படி வழக்கு தொடுத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இது குறித்த விசாரணைகள் முடியும் வரை திரிஷ்யம்-3 ஓடிடி உரிமையை வேறு யாருக்கும் வழங்கக் கூடாது என்று ஒரு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் மே 15ம் தேதி நடைபெற இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !