உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : மனோரமாவின் கணவரைத் தெரியுமா?

பிளாஷ்பேக் : மனோரமாவின் கணவரைத் தெரியுமா?

மனோரமாவின் கணவரின் பெயர் ராமநாதன். அவர் ஒரு நாடக நடிகராக இருந்தார். மற்றும் நாடக கம்பெனிகளின் மேனேஜராகவும் இருந்தார். பல நாடகங்களில் மனோரமா நடிக்க வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். இதனால் மனோரமா அவரை காதலித்தார். பின்னாளில் மனோரமா சினிமாவில் பெரிய நடிகை ஆனதும், ராமநாதன் அவரது மேனேஜராக இருந்தார். அவ்வப்போது சினிமாவிலும் நடித்தார்.

ராமநாதன் கதையின் நாயகனாக நடித்த படம் 'கண் திறந்தது'. இந்தப் படத்தை கே.வி.ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கினார். ராமநாதன் ஜோடியாக மைனாவதி நடித்தார். இவர்களுடன் சகஸ்ரநாதம், சி.டி.ராஜகாந்தம், ஏ.கருணாநிதி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தில் ராமநாதன் சிறுவயதில் காணாமல் போன பெரும் பண்ணையார் வீட்டு பிள்ளையாக இருந்து பின்னாளில் ரங்கன் என்ற திருடனாக மாறி இறுதியில் மீண்டும் பண்ணையாராகும் கேரக்டரில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் தேடிவந்த மாப்பிள்ளை, கருந்தேழ் கண்ணாயிரம், நினைவில் நின்றவள், பிள்ளையோ பிள்ளை, முத்துச்சிப்பி, பனித்திரை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இடையில் ராமநாதனை திருமணம் செய்து கொண்டார் மனோரமா. சில மாதங்களே மனோரமாவோடு வாழ்ந்த ராமநாதன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். தன்னுடன் நாடகங்களில் நடித்து வந்த பங்கஜம் என்பவரை மணந்து கொண்டு அவருடனேயே வாழ்க்கை நடத்தினார். கடைசி காலத்தில் வறுமையில் வாடிய ராமநாதனுக்கு மனோரமோ உதவி செய்து வந்தார். அவர் இறந்த பிறகு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது மகன் பூபதியை கொண்டு இறுதி சடங்கை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Radhakrishnan Seetharaman, Vizag
2026-04-24 13:34:34

ராமநாதனா? ரங்கநாதனா? பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டார் :)