ரன் படம் ரீ ரிலீஸாகவில்லை : தேதி மாற்றம்
2002ம் ஆண்டில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன், விவேக் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ரன்'. கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பிறகு இன்று ஏப்ரல் 24ம் தேதியன்று ரன் படம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால், இன்று ஏப்ரல் 24ம் தேதியில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவகாசி படமும் ரீ ரிலீஸ் ஆவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிவகாசி, ரன் என இரு படங்களையும் ஒரே தயாரிப்பாளர் தயாரித்த படங்கள் என்பதால் ரன் படத்தை தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி இயக்குனர் லிங்குசாமி வெளியிட்ட பதிவில், ‛‛நிறைய ஆலோசனைகளுக்கு பிறகு ‛ரன்' படத்தை வேறு ஒரு தேதியில் ரீ ரிலீஸ் ஆகும். விரைவில் அந்த தேதி அறிவிப்பை வெளியிடுவதாக'' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.