உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிங்கீதம் சீனிவாசராவின் 40 வருட கனவு

சிங்கீதம் சீனிவாசராவின் 40 வருட கனவு

தமிழ் சினிமாவில் 'திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்,” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் படத்தை இயக்கியுள்ளார்.

1972ல் வெளிவந்த தெலுங்குப் படமான 'நீதி நிஜயதி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிங்கீதம். 95 வயதானாலும் தற்போது அவரது 61வது படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி அதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் நாக் அஷ்வினின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் பேசிய சிங்கீதம் சீனிவாச ராவ், “40 வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் கதையை எழுதினேன். எத்தனையோ நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி இருக்கிறேன். அனைவருக்கும் பிடித்திருந்தது, இருந்தாலும் அது படமாக மாறவில்லை. கடைசியாக நாக் அஷ்வின் இப்படத்தைத் தயாரிக்கிறார்,” என்று பேசியுள்ளார்.

விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !