உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அந்த தீம் மியூசிக் ஐடியா கொடுத்தவர் அஜித் : அமர்க்களம் ரீ ரிலீசில் இயக்குனர் சரண்

அந்த தீம் மியூசிக் ஐடியா கொடுத்தவர் அஜித் : அமர்க்களம் ரீ ரிலீசில் இயக்குனர் சரண்

அஜித், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்டோர் நடித்த ‛அமர்க்களம்' படம் நேற்று ரீ ரிலீஸ் ஆன நிலையில் படத்தின் இயக்குனர் சரண், சென்னையில் படம் பார்த்துவிட்டு அளித்த பேட்டி : ''இத்தனை ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆன அமர்க்களம் படம் பல்வேறு நினைவுகளை கொண்டு வருகிறது. அமர்க்களம் படத்தில் அஜித், ஷாலினி நிஜமாகவே காதலர்களாக வாழ்ந்தார்கள் எனலாம். இன்று(நேற்று) அவர்களின் திருமணநாள். அந்த நாளில் படம் வருவது மகிழ்ச்சி. அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.

தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட இடங்களில் 200 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. அப்போது கூட இவ்வளவு தியேட்டரில் வெளியாகவில்லை. இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை எப்படி பார்க்கிறார்கள் என்பதை பார்க்க வந்தேன். அவர்கள் கனெக்ட் ஆகி வரவேற்றார்கள். அது எனக்கும் மகிழ்ச்சி. அஜித்தின் ஸ்டார் பவர், ரசிகர்கள் அன்பு இந்த படத்தில் தெரிந்தது.

அமர்க்களம் படத்தில் தான் அஜித் முதன்முறையாக ஆக் ஷன் ஹீரோவாக மாறினார். அதற்கு அவர் உயிர் கொடுத்தார். ஷாலினி நடிப்பும் பிரமாதமாக அமைந்தது. குறிப்பாக, படத்தின் தீம் மியூசிக் இன்றும் பாராட்டப்படுகிறது. அதற்கு ஐடியா கொடுத்தவர் அஜித்தான். மேகங்கள் என்னை தொட்டு பாடலை அப்படி மாற்றுங்கள் என்றார். அதேபோல் கணவர் சாய்ஸ் பற்றி ஒரு டயலாக்கை ஷாலினி சொந்தமாக பேசினார். அதற்கும் வரவேற்பு கிடைத்தது. இந்த நேரத்தில் படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா நிறுவனம், படத்துக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு நன்றி. டிஜிட்டல் தளத்தில் படம் நன்றாக வந்துள்ளது. சவுண்டு குவாலிட்டியும் பக்காவாக அமைந்துள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ஹரி
2026-04-25 13:47:19

அப்ப தீனா என்ன குடும்ப படமா