ஸ்மார்ட் போனில் இருந்து விலகி இருப்பது ஏன் : சாய் அபயங்கர் விளக்கம்
தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இப்போது இவர் கைவசம் சூர்யா நடிக்கும் கருப்பு, கார்த்தியின் மார்ஷல், அட்லி இயக்க அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா, லாரன்சின் பென்ஸ், சிம்பு, தனுஷ் படங்கள் உள்ளன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சாய் அபயங்கர் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது இல்லை. சாதாரண பட்டன் போன் மட்டுமே பயன்படுத்துகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில் ''நான் சமூகவலைதளங்களில் இருந்து விலகி இருக்கிறேன். அதில் தேவையான விஷயங்களும் உள்ளன, தேவையில்லாத விஷயங்களும் உள்ளன. அது நேரத்தை சாப்பிடுகிறது. அதனால்தான் சாதாரண போன் பயன்படுத்துகிறேன். எனக்கு தேவையான தகவல்களை மற்ற வடிவங்களில் நான் பெற்றுவிடுகிறேன். சாதாரண போனிலேயே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசுகிறரா்கள். நான் 6ம் வகுப்பு படிக்கிற காலத்தில் இருந்து1000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி உள்ளேன். 60 வயதுக்கு மேல் உடல்நலம் பாதிக்கப்பட்டால், தேவைப்பட்டால் இந்த பாடல்களில் இருந்து தேவையானவற்றை பயன்படுத்துவேன்'' என்கிறார்.