வாரி வாரி : தீயின் புதிய ஆல்பம் வெளியீடு
பாப் இசை உலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறவர் தீ. ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியர். சுயாதின இசை ஆல்பங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவரது சமீபத்திய வெளியீடான 'டோன்ட் லுக் டவுன்' பெரிய வரவேற்பு பெற்றது .
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தீ ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த இணைப்புடன் அவர் வாரி வாரி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆல்பத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், விவேக் பாடலை எழுதியுள்ளார். இது தொடர்பாக தீ குறிப்பிடுகையில், ''இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது. தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்'' என்றார்.