ஒரே நாளில் 4 சேனலில் ஒளிபரப்பாகும் துரந்தர்
ADDED : 2 hours ago
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி 1700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
துரந்தர் முதல் பாகம் ஓ டி டி தளங்களில் வெளியிடப்பட்டாலும் இதுவரை தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவில்லை. இதனால் இந்த படம் பரவலான மக்களை சென்றடையவில்லை என்பதால் தற்போது தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.
ஏசியானெட், ஸ்டார் விஜய், ஸ்டார் மா மற்றும் கலர்ஸ் கன்னடா ஆகிய தொலைக்காட்சிகளில் மே 1ம் தேதி, மதியம் 2.50 மணிக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி தமிழில் ஒளிபரப்பு செய்கிறது.