உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜப்பானில் வெளியாகும் 'துரந்தர்'

ஜப்பானில் வெளியாகும் 'துரந்தர்'


ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'துரந்தர்'. இப்படம் உலக அளவில் சுமார் 1400 கோடி வசூலித்தது. அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியாகி 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்தியத் திரைப்படங்கள் வெளியான சில மாதங்கள் கழித்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளியாவது வழக்கம். அது போல கடந்த வருடம் வெளியான 'துரந்தர்' முதல் பாகத்தை ஜப்பான் நாட்டில் வெளியிட உள்ளார்கள்.

ஜுலை 10ம் தேதி இப்படம் அங்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ஜப்பான் மொழியில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.

ஏற்கெனவே சில இந்தியத் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகி நல்ல வசூலைக் கொடுத்துள்ளது. அது போல இந்தப் படமும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !