சமந்தா பெற்ற முதல் சம்பளம் 500 ரூபாய்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். சில வருடங்களில் இருவரும் பிரிந்தனர். அடுத்து இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
நேற்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவருடைய முதல் சம்பளம் 500 ரூபாய் என்ற தகவலைப் பகிர்ந்தார். பள்ளியில் படித்து வந்த போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அந்த ரூ.500 சம்பளத்தை வாங்கினாராம்.
தற்போது ஒரு படத்திற்கு 4 கோடி அல்லது 5 கோடி வாங்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் சமந்தா. ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் சொந்த வீடுகள் இருக்கிறது. நான்கைந்து விலை உயர்ந்த கார்கள் இருக்கிறது.
சமந்தா தயாரித்து நாயகியாக நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' தெலுங்குப் படம் மே 15ம் தேதி வெளியாகிறது.