விஜய் எப்படி ஜெயித்தார்? - நடிகர் ஒய். ஜி. மகேந்திரா
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தெரிவித்துள்ள கருத்து வருமாறு: விஜய் எப்படி ஜெயித்தார்? எதற்காக ஜெயித்தார்? ஒரு சினிமாக்காரரா ஜெயித்தார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் இனிமேல் இடமே கிடையாது. ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் ஜெயித்தார். மக்கள் விரும்பினார்கள், அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வளவுதான் ஆர்கியூமென்ட் க்ளோஸ்டு (Argument Closed). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
இது ஒரு மாற்றத்திற்கான முன்னெடுப்பு. தேங்கிக் கிடந்த தண்ணீரை ஒரு புது வெள்ளம் வந்து அடிக்க வேண்டும், புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அந்தப் புது வெள்ளம் விஜய் தான் என்று அவர்கள் தீர்மானித்தார்கள், அவரைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு சக நடிகராக நான் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பல வருடங்களாக விஜய் குடும்பத்தை எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இருந்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும், எல்லா மக்களுக்கும் என்று நான் சொல்லும்போது மதச் சார்பின்றி, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி எல்லாருக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்குவார் என்ற நம்பிக்கையோடு அவரை நான் வாழ்த்துகிறேன்.
கொஞ்சம் பாலைவனமாகிவிட்ட தமிழ்நாட்டை மீண்டும் ஒரு சோலைவனமாக்க வேண்டும் விஜய் என்று அவரை வாழ்த்துகிறேன். இதில் அரசியல் கிடையாது, வேறு எதுவும் கிடையாது. ஒரு காமன் சிட்டிசனாக (Common Citizen) புது தலைவர்களை நான் வாழ்த்துகிறேன், அவ்வளவுதான், நன்றி.
மேற்கண்டவாறு நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தெரிவித்தார்.