கைவிட்ட 'கர', காப்பாற்றுமா 'கருப்பு'
2026ம் ஆண்டு தமிழ் சினிமா இன்னும் ஒரு மகத்தான வெற்றியை நோக்கிப் பயணிக்காமல் தடுமாறி வருகிறது. எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறவில்லை. மாறாக, “தாய் கிழவி, யூத், வித் லவ்” ஆகிய மூன்று படங்கள் மட்டுமே கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிடும்படியான வெற்றியைத் தந்துள்ளன.
கடந்த வாரம் வெளியான நடிகர் தனுஷின் 'கர' படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்த வருடத்தின் சினிமாவின் முதல் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'கர' படமும் கைவிட்டது.
இந்நிலையில் அடுத்த வாரம் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் வெளியாக உள்ளது. அவரும் முன்னணி நடிகர் என்பதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு வழக்கம் போலவே இருக்கிறது. இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே வெற்றிக்காகத் தடுமாறி வருகிறார் சூர்யா. அவருக்கும் இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த கோடை விடுமுறையை 'கருப்பு' படமாவது நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் தியேட்டர்காரர்களும் நினைக்கிறார்கள்.