ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம்
தொடர் வெற்றிகளை பெற்று வரும் துல்கர் சல்மானின் அடுத்த படம் 'ஐ அம் கேம்'. மலையாளத்தில் உருவாகும் இந்த படம் பான் இந்தியா படமாக தயாராகிறது. அதிக பட்ஜெட்டில் தயாராகும் மலையாள படங்களின் பட்டிலில் இடம் பிடித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்திருந்தாலும் அதற்கு பிந்தைய பணிகள் தாமதமாவதால் பட வெளியீடும் தள்ளிப்போகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார் துல்கர். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாகவும் அமைந்துள்ளது. ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.