உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் 'துரந்தர் 2'

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் 'துரந்தர் 2'

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் மாதம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'துரந்தர் 2'. இப்படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. ஏறக்குறைய தியேட்டர் ஓட்டத்தின் முடிவில் இந்தப் படம் தற்போது வந்திருக்கிறது.

இப்படம் அடுத்து இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 அன்று வெளியாகிறது. இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகப் போகிறது. ஆனால், என்றைக்கு வெளியாகும் என்ற தகவலை அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

கடந்த வருடம் வெளியான 'துரந்தர்' படத்தின் முதல் பாகமும் ஓடிடி தளத்தில் அதிகப் பார்வையாளர்களை உலக அளவில் ஈர்த்தது. அதைவிட இரண்டாம் பாகம் இன்னும் அதிகம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !