உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கினாரா டான்ஸர் ஜப்பான் குமார்

சினிமா வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கினாரா டான்ஸர் ஜப்பான் குமார்

தமிழ், தெலுங்கு சினிமாவில் ராஜூசுந்தரம், பிரபுதேவா டான்ஸ் குழுவின் பல ஆண்டுகளாக டான்ஸ் ஆடுபவர் ஜப்பான் என்கிற குமார். இவர் காமெடி கலந்து டான்ஸ ஆடும் ஸ்டைல் பிரபலம். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் இவர் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சென்னையில் சொந்தமாக ஓட்டல் திறந்து இருக்கிறார் என்று வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த சின்ன ஓட்டலில் ஜப்பான் குமார் வியாபாரம் செய்யும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஜப்பான் குமாரிடம் தொடர்பு கொண்டு பேசினால் அந்த வீடியோக்களை நானும் பார்த்தேன். அது தவறான தகவல். சென்னை கமலா தியேட்டர் அருகில் அந்த ஓட்டல் இருப்பது உண்மை. அதில் நானும் இருப்பது உண்மை. ஆனால், அந்த ஓட்டல் என் தம்பி சூரிக்கு சொந்தமானது. நான் ப்ரியாக இருக்கும்போது உதவிகள் செய்வேன். அதை சிலர் தவறுதலாக என் ஓட்டல் என்று கிளப்பிவிட்டுள்ளார். நான் சினிமாவிலும் இருக்கிறேன். வழக்கம்போல் டான்சராகவும் பல படங்களில் ஆடிக்கொண்டு இருக்கிறேன் 'என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !