ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா
ADDED : 115 days ago
ஹிந்தியில் ஏற்கனவே வெளியாகியுள்ள ராகினி எம்எம்எஸ் படத்தின் மூன்றாவது பாகத்தை தற்போது இயக்குகிறார் ஏக்தா கபூர். சல்மான்கானின் மைத்துனர் ஆயுஷ் ஷர்மா, அமீர்கானின் மகன் ஜூனைத்கான் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்தில் தமன்னா நாயகியாக கமிட்டாகி உள்ளார். அமானுஷ்யம் கலந்த திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் தமன்னா, அமானுஷ்ய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. தன்னை மையப்படுத்திய கதை என்பதால் இந்த படத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்திருக்கிறார் தமன்னா. இப்படம் தவிர தமிழில் சுந்தர்.சி இயக்கும் புருஷன் படத்தில் நடித்துவரும் தமன்னா, ஹிந்தியில் தயாராகி வரும் சாந்தாராம் பயோபிக் படத்திலும் ஜெய்ஸ்ரீ சாந்தாராம் வேடத்தில் நடித்து வருகிறார்.